முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெண்பா தரம் 4,5 தமிழ்




வெண்பா : 2

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி


விளக்கம் 

உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல yகுணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.


வெண்பா 

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு

ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு

நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.


விளக்கம்

ஆற்றில நீர்ப் பெருக்கில்லாமல் போய் அடி எடுத்து வைத்தால் கால் சுடும் அந்த நாளிலும் ஆற்றைத் தோண்டினால் அந்த ஆறு ஊற்றுப் பெருக்கால் உலகத்துக்கு நீர் ஊட்டும். தகுதியானவர்களுக்குத் தேவையெனில், நல்ல குடியிற் பிறந்தவர்கள் ஏழ்மை யுற்றிருந்தாலும் மனதார இல்லை என்று சொல்ல மாட்டார்கள். தங்களுடைய நண்பர்கள் மூலமாகவோ, ஈகைக் குணம் படைத்த செல்வந்தர்கள் மூலமாகவோ உதவி கிடைக்க ஏற்பாடு செய்வர்.

ஏற்றவர்க்கு = உதவி வேண்டுவோர்க்கு (தகுதியானவர்க்கு)

நல்குரவு = ஏழ்மை   நல்கூர்ந்தார் = ஏழ்மையடைந்தவர்கள்

இசைந்து = மனதார



வெண்பா 8

ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்தவாயினும் ஊழ்

கூட்டும் படியன்றிக் கூடாவாம்-தேட்டம்

மரியாதை காணு மகிதலத்தீர்கேண்மின்

தரியாது காணுந் தனம் (8)


பொருள் 

பொருள் ஈட்டும் முயற்சி கணக்கில் அடங்காத பலவாயினும் கைக்கூடுவது ஊழின் அளவே நிகழும். அதற்கு மேல் செல்வம் சேராது. தேடிய செல்வத்தால் மரியாதை காணும் மகிமை பொருந்திய உலக மக்களே! இதனைக் கேட்டுக்கொள்ளுங்கள். அந்தச் செல்வமும் ஒருவரிடம் நிலையாகத் தரித்து இருப்பதில்லை.


வீடியோ...

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இலங்கையின் மாவட்டங்கள்,மாகாணங்கள்.

 இலங்கை நான்கு பக்கமும் இலங்கை நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவாகும்  இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும் இலங்கையின் 9மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது மாவட்டங்கள்,மாகாணங்கள். மாகாணங்களின் கொடிகள்

பணம் || Money || Grade 4,5