வெண்பா : 2 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி விளக்கம் உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல yகுணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள். வெண்பா ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும் இல்லை என மாட்டார் இசைந்து. விளக்கம் ஆற்றில நீர்ப் பெருக்கில்லாமல் போய் அடி எடுத்து வைத்தால் கால் சுடும் அந்த நாளிலும் ஆற்றைத் தோண்டினால் அந்த ஆறு ஊற்றுப் பெருக்கால் உலகத்துக்கு நீர் ஊட்டும். தகுதியானவர்களுக்குத் தேவையெனில், நல்ல குடியிற் பிறந்தவர்கள் ஏழ்மை யுற்றிருந்தாலும் மனதார இல்லை என்று சொல்ல மாட்டார்கள். தங்களுடைய நண்பர்கள் மூலமாகவோ, ஈகைக் குணம் படைத்த செல்வந்தர்கள் மூலமாகவோ உதவி கிட
R.KOWSITH
பதிலளிநீக்குmodchansajeevani@gmail.com
நீக்கு